பதிவு செய்த நாள்
27
ஆக
2015
12:08
சென்னிமலை: சென்னிமலை அடுத்த கொமராபாளையம் மணிமலை கருப்பண ஸ்வாமி, மலை மீது கோவில் கொண்டு தனி சன்னதியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு கருப்பண ஸ்வாமி, சைவக் கருப்பண ஸ்வாமியாக விளங்குகிறார். இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை முதற்கால பூஜையுடன் துவங்கியது. பின், ஏராளமானவர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று காலை 7.40 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
* சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து நகர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 5.15 மணிக்கு நடக்கிறது. இங்கு, கடந்த செவ்வாய் கிழமை காலை முதல் யாக பூஜைகள் நடந்து வருகிறது.
* வெள்ளோடு அருகே முகாசிபுலவன்பாளையம் கிராமம், பாலாஜி கார்டன், ரோஜா நகர், வேலன் நகர் செல்வ விநாயகர், கன்னிமார் ஸ்வாமிகள், கருப்பண ஸ்வாமி கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை, 9 மணிக்கு நடக்கிறது.