பதிவு செய்த நாள்
27
ஆக
2015
12:08
திருச்சி: திருச்சி, வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரங்கள் புனரமைக்கப்பட்டு, செவ்வந்தி விநாயகர், அரசரடி விநாயகர், குழுமியானந்த ஸ்வாமிகள், சஞ்சீவி ஆஞ்சநேயர், சன்னாசியப்பா ஆகிய சுவாமிகளுக்கு இன்று, (27ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரியில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். விநாயகர் வழிபாடு, திருமகள் வழிபாடு, தூய்மை செய்தல், திருமண் எடுத்தல், முளைப்பாரி, காப்பு கட்டுதல் நடந்தது. பின், திருக்குடங்களில் இருந்த தீர்த்தம் நிறுவப்பட்டது. மாலை, 6 மணிக்கு கும்பாபிஷேக முதல் கால யாகவேள்வி துவங்கியது. நேற்று காலை, 9 மணிக்கு, 2ம் கால வேள்வி துவங்குகிறது. மாலை, 6 மணிக்கு 3ம் கால வேள்வி நடைபெற்றது. இன்று, (27ம் தேதி) அதிகாலை, 5 மணிக்கு, 4ம் கால வேள்வி நடக்கிறது. காலை, 7.30 மணி முதல், 9 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்தில் பழனிவேல் தேசிகர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பின் மூலவர் குழுமியானந்த சுவாமிகள் மகா அபிஷேக, ஆராதனைகள் முடிந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.