சிவகாசி:கும்பகோணம் மகாமகம் திருவிழாவிற்காக செங்கோட்டை- சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரயில் இயக்க சிவாகாசி பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கோட்டை-சென்னை ரயில் பாதை மீட்டர் கேஜாக இருந்த போது செங்கோட்டையில் இருந்து தினமும் கும்பக்கோணம் வழியில் சென்னைக்கு முன்பதிவு இல்லா சாதாரண ரயில் இயக்கப்பட்டு வந்தன. இதுபோல் செங்கோட்டை-நாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டது. இவ்வழி அகலபாதையாக மாற்றிய பின் இந்த இரண்டு ரயில்களும் இயக்கப்படவில்லை. மகாமகத்தை யொட்டி மீண்டும் செங்கோட்டை- சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என, சிவகாசிபகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.