Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » தத்துவ ஞான உற்பத்தி
தத்துவ ஞான உற்பத்தி
எழுத்தின் அளவு:
தத்துவ ஞான உற்பத்தி

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
17:42

1. சுத்தா நிஷ்காம தர்மை: ப்ரவர குரு
கிரா தத் ஸ்வரூபம் பரம் தே
சுத்தம் தேஹ இந்த்ரிய ஆதி வ்யபகதம்
அகில வ்யாப்தம் ஆவேதயந்தே
நாநாத்வ ஸ்தௌல்ய கார்ச்ய ஆதி து குணஜ வபு:
ஸங்கத: அத்யாஸிதம் தே
வஹ்நே: தாரு ப்ரபேதேஷு இவ மஹத்
அணுதா தீப்ததா சாந்ததா ஆதி

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு சிறந்த குருவின் மூலமாக கர்மங்களை அறிந்தவர்களும், எந்தப் பலனையும் விரும்பாது செய்பவர்களும் உனது உருவத்தை எப்படி அறிகின்றனர்? உனது ஸ்வரூபம் என்பது உடல் புலன்கள் ஆகியவற்றிலும் மாறுப்பட்டது; மிகவும் தூய்மையானது எங்கும் நிறைந்துள்ளது என்று உணர்கின்றனர். நெருப்பு பலவிதமான கட்டைகளில் எரியும்போது பெரியதாக, சிறியதாக, ப்ரகாசம் அதிகமாக, மெதுவாக எரிவதாக இப்படிப் பலவாறு உள்ளது அல்லவா? இதே போன்று ப்ரஹ்மம் ஆகிய நீ  (ப்ரஹ்மம் என்பது நான்முகன் அல்ல: ஸ்ரீமந் நாராயணன் ஆவான்) உடலின் தொடர்பு காரணமாக பெரியவனாகவும் சிறியவனாகவும் உள்ளாய்.

2. ஆசார்ய ஆக்ய அதரஸ்த அரணி
ஸமநுமிலத் சிஷ்யரூப உத்தர அரணி
ஆவேத உத்பாஸிதேந ஸ்புடதர
பரிபோத அக்நிநா தஹ்யமாநே
கர்ம ஆலீ வாஸநா தத் க்ருத தநு
புவந ப்ராந்தி காந்தார பூரே
தாஹ்ய அபாவேந வித்யா சிகிநி ச
விரதே த்வந்மீ கலு அவஸ்தா

பொருள்: குருவாயூரப்பா! குரு என்பவர் கீழ் உள்ள அரணிக்கட்டை ஆவார். அந்த அரணிக்கட்டை மீது சிஷ்யன் என்ற மேல் அரணிக்கட்டை உராயும்போது ஞானம் என்ற நெருப்பு உண்டாகிறது. அந்த நெருப்பானது கர்மங்கள், கர்மங்கள் மீது உள்ள பற்றுதல், அவற்றின் விளைவான உடல், உலகம் ஆகிய காடுகளை அழிக்கிறது. எரித்து முடித்த பின்னர், எரிப்பதற்கு வேறு பொருட்கள் இல்லாத காரணத்தினால் அமைதியாகிறது. அப்போது உள்ள நிலையே உனது ஸ்வரூபம் அன்றோ?

3. ஏவம் த்வத் ப்ராப்தித: அந்ய: ந ஹி
கலு நிகில கிலேச ஹாநே: உமாய:
ந ஏகாந்த ஆத்யந்திகா: தே க்ருஷிவத்
அகத ஷாட்ருண்ய ஷட்கர்ம யோகா:
துர்வைகல்யை: அகல்யா அபி நிகம
பதா: தத் பலாநி அபி அவாப்தா:
மத்தா: த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி
பதநே யாந்தி அநந்தாந் விஷாதாந்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக உலகில் உண்டாகும் பல்வேறு துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு உன்னை அடைவது தவிர வேறு வழி கிடையாது. ஆயுர்வேத வைத்திய முறையில் கூறப்பட்ட மருந்துகளும், நீதி நூல்களில் காணப்படும் ஆறு விதமான நெறிமுறைகளும், தர்ம அறநெறி நூல்கள் கூறுகின்ற ஆறு செயல்களும் (கர்மங்களும்), வேதங்கள் கூறுகின்ற எட்டு வகையான யோகங்களும் கூட துன்பங்களை வேரோடு அழிக்கவோ அல்லது மீண்டும் வராமல் தடுக்கவோ திறன் படைத்தவை அல்ல. அவையாவும் விவசாயம் எவ்வாறு கடினமான முயற்சிக்குப் பின் பலன் அளிக்கிறதோ, அது போன்றவை ஆகும். வேதங்களில் உள்ள (துயர் நீக்கும்) வழிகள், நமக்கு எளிதில் கிடைக்க இயலாத பொருள்கள், காலம் ஆகியவற்றால் செய்ய இயலாதவை ஆகும். அப்படியும் அந்த வேத வழிகளைப் பின்பற்றும், சிலர், அதன் பயனாக சுவர்க்கம் புகுந்து, கர்வம் கொண்டும், உன்னையே மறந்து விடுகின்றனர். இதனால் சுவர்க்க பலன் முடிந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது, மிகுந்த துன்பம் அடைகின்றனர். (ஆறு கர்மம் = யஜநம், யாஜநம், அத்யயநம், அத்யாபனம், தானம், ப்ரதிக்ரஹம்)

4. த்வத் லோகாத் அந்ய லோக: க்வநு பய
ரஹித: யத் ப்ரார்த்த த்வய அந்தே
த்வத் பீத: ஸத்ய லோகே அபி ந
ஸுக வஸதி: பத்மபூ: பத்மநாப
ஏவம் பாவே து அதர்ம ஆர்ஜித பஹு
தமஸாம் கா கதா நாரகாணாம்
தத் மே த்வம் ச்சிந்தி பந்தம் வரத
க்ருபண பந்தோ க்ருபா பூர ஸிந்த்தோ

பொருள்: பத்மநாபா! குருவாயூரப்பா! உனது வைகுண்ட லோகம் தவிர நிலையான வாழ்விற்கு அச்சம் விளைவிக்காத இடம் வேறு எங்கு உள்ளது? தனது ஆயுட்காலமான இரண்டு கோடி ஆண்டு முடித்த ப்ரும்மா, தனது ஸத்திய லோகத்தில் பயம் இல்லாமல் வாழ இயலவில்லையே (ப்ரும்மாவின் கதியே இப்படி என்றால்) தர்மம் அல்லாத வழிகளில், பாவம் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு, நரகத்தில் விழுந்தவர்களின் நிலைமையைப் பற்றி நான் எப்படிக் கூறுவேன் வரதனே! துயரம் அடைந்தவர்களுக்குப் புகலிடமே! கருணைக் கடலே! எனது பந்தம் அனைத்தையும் நீக்கி அருள்வாயாக!

5. யாதார்த்யாத் த்வத்மயஸ்ய ஏவ ஹி மம ந
விபோ வஸ்துத: பந்த மோக்ஷௌ
மாயா வித்யா தநுப்யாம் தவ து விரசிதௌ
ஸ்வப்ந போத உபமௌ தௌ
பத்தே ஜுவத் விமுக்திம் கதவதி
ச பிதா தாவதீ தாவத் ஏக:
புங்க்தே தேஹ த்ரும ஸ்த: விஷய பல
ரஸாந் ந அபர: நிர்வ்யத ஆத்மா

பொருள்: குருவாயூரப்பா! உனது அம்சமாகவே திகழும் ஜீவாத்மாவில் (இதனை த்வம் அஸி என்று கூறுவர்-நானே ப்ரஹ்மம் என்று பொருள்) ஒருவனான எனக்கு பந்தம் அல்லது மோக்ஷம் என்பது கிடையாது. அவை உனது மாயையாலும் ஞானத்தாலும் உருவாக்கப்பட்டவை அன்றோ! அவை கனவு நிலைக்கும், விழித்திருக்கும் நிலைக்கும் ஒப்பானவை, உலகில் பற்றுடன் வாழும் மனிதனுக்கும், பற்று நீங்கி வாழும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடும் அதே அளவுதான். இந்த உடல் மரம் போன்றது. அதில் அமர்ந்துகொண்டு ஒருவன்(ஜீவாத்மா) இன்ப துன்பங்கள் என்னும் பழங்களை உண்கிறான். அதே மரத்தில் உள்ள மற்றொருவன் (பரமாத்மா) இவன் உண்பதைப் பார்த்துக் கொண்டு, தான் உண்ணாமல் உள்ளான் (இது சாந்தோக்ய உபநிஷத்தில் வருவது).

6. ஜீவத் முக்தத்வம் ஏவம் விதம் இதி
வசஸா கிம் பலம் தூரதூரே
தத் நாம அசுத்த புத்தே: ந லகு
மநஸ: சோதநம் பக்தித: அந்யத்
தத் மே விஷ்ணோ க்ருஷீஷ்டா: த்வயி
க்ருத ஸகல ப்ரார்பணம் பக்தி பாரம்
யேந ஸ்யாம் மங்ஷு கிஞ்சித் குரு வசந
மிலத் த்வத் ப்ரபோத: த்வத் ஆத்மா

பொருள்: குருவாயூரப்பா! விஷ்ணுவே! உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது (தனது பற்றற்ற தன்மையால்) விடுதலை பெற்ற (ஜீவமுக்தன்) மனிதனின் நிலை இப்படியானது என்று கூறுவதால் என்ன நன்மை உள்ளது? மனதில் சிறிதும் தூய்மை என்பதே இல்லாதவர்களுக்கு இந்த ஜீவமுக்த நிலை என்பது வெகுதூரத்தில் அல்லவா உள்ளது. ஆயினும் அந்த மனதை சுத்தம் செய்வதற்கு உனது பக்தியை விடச் சிறந்த வழி என்று வேறு எதுவும் கிடையாது. எனவே உன்னிடம் அனைத்தையும் அர்ப்பணம் செய்யும் பக்தியை எனக்கு நீ அளிப்பாயாக! அந்த பக்தியையும், குரு செய்யும் சிறு உபதேசங்களையும் கொண்டு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து ஞானம் ஏற்பட்டவனாக, விரைவில் ப்ரஹ்மமாகவும் ஆகிவிடுவேன் (உயிர் பிரிந்த நிலையில் ஆத்மா ப்ரஹ்மத்துடன் கலந்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பெறுகிறது என்று ப்ரஹ்ம சூத்திரம் கூறுகிறது. இவர் அதனைக் கூறுகிறார்).

7. சப்த ப்ரஹ்மணி அபி இஹ ப்ரயதித
மநஸ: த்வாம் ந ஜா நந்தி கேசித்
கஷ்டம் வந்த்ய ச்ரமா: தே சிரதரம்
இஹ காம் பிப்ரதே நிஷ்ப்ரஸுதிம்
யஸ்யாம் விச்வ அபிராமா: ஸகல
மல ஹரா: திவ்ய லீலா அவதார:
ஸத் சித் ஸாந்த்ரம் ச ரூபம் தவ ந
நிகதிதம் தாம் ந வாசம் ப்ரியாஸம்

பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள சிலர் வேதங்களைப் பெரிதும் முயன்று, முழு மனதுடன் கற்று அந்த வேதங்களில் மனதைச் செலுத்தியவர்களாக உள்ளனர். இருந்தாலும் அவர்கள் உன்னை அறிவதில்லை. அவர்கள் இப்படியாக மிகவும் சிரமத்துடன் வேதங்களைச் சுமக்கின்றனர். இது கன்று போட இயலாத மலட்டுப் பசுவைப் போல பராமரிப்பது போல் அல்லவா உள்ளது. அனைவரது மனதையும் சுலபமாகக் கவர்ந்து இழுப்பதும், பாவங்களை நீக்க வல்லதும், உனது லீலைகளை மிகவும் தெளிவாக விளக்குவதும், அவதார சரிதங்களைக் கூறுவதும், ஸச்சிதானந்த மயமாக உள்ளதும் ஆகிய உனது உயர்ந்த திருமேனியைப் பற்றி வர்ணிக்காத எந்த வார்த்தையையும் நான் கற்கக்கூடாது இப்படியாக நீ அருள்வாயாக.

8. யோ யாவாந் யாத்ருச: வா த்வம் இதி கிம்
அபி ந ஏவ அவகச்சாமி பூமந்
ஏவம் ச அநந்ய பாவ: த்வத் அநுபஜநம்
ஏவ ஆத்ரியே சைத்ய வைரிந்
த்வத் லிங்காநாம் த்வத் அங்க்ரி ப்ரியஜந
ஸதஸாம் தர்சந ஸ்பர்சந ஆதி:
பூயாத் மே த்வத் ப்ரபூஜா நதி துதி குண கர்ம
அநுகீர்த்தி ஆதர: அபி

பொருள்: குருவாயூரப்பா! பூரணமானவனே! சிசுபாலன் விரோதியே! க்ருஷ்ணா! நீ எப்படிப்பட்ட ஸ்வரூபம் உடையவன், உனது பெருமைகள், மகிமைகள் என்ன, உனது நெறிமுறைகள் என்ன, இப்படியாக எதனையும் நான் அறியவில்லை. இருப்பினும் வேறு எங்கும் மனதைச் செலுத்தாமல் உன்னையே த்யானிக்கிறேன். அதனை மட்டுமே விரும்புகிறேன். உனது விக்ரகங்களிலும், திருவடிகளிலும் பக்தி செலுத்தும் அடியார்களைக் கண்டவுடன் அவர்களை வணங்குவது, அவர்ளுடன் சேர்வது ஆகியவை எனக்குக் கைகூட வேண்டும், மேலும், உன்னை எப்போதும் வணங்குவது, பூஜை செய்வது, துதிப்பது, திருக்கல்யாண குணங்களைக் கூறுவது ஆகியவை எனக்கு உண்டாக்க வேண்டும்.

9. யத் யத் லப்யேத தத்தத் தவ ஸமுபஹ்ருதம்
தேவ தாஸ: அஸ்மி தே அஹம்
த்வத் கேஹ உந்மார்ஜந ஆத்யம் பவது
மம முஹு: கர்ம நிர்மாயம் ஏவ
ஸுர்ய அக்நி ப்ராஹ்மண ஆத்ம ஆதிஷு
 லஸித சதுர்பாஹும் ஆராதயே த்வாம்
த்வத் ப்ரேம ஆர்த்ரத்வரூப: மம ஸததம்
அபிஷ்யந்ததாம் பக்தி யோக:

பொருள்: குருவாயூரப்பா! எனக்குக் கிடைக்கும் எந்தப் பொருளையும் நான் உன்னிடமே அர்ப்பணம் என்று தந்து விடுவேனாக, நான் என்றும் உனது அடிமையாகவே உள்ளேன். உனது திருக்கோயிலைச் சுத்தம் செய்வது போன்ற தூய பணிகள் எனக்கு உண்டாக வேண்டும். மேலும், சூரியன், நெருப்பு, ப்ராமணன், இதயம் ஆகியவற்றில் நான்கு கைகளுடன் கூடிய உனது திருமேனியைக் கண்டு வணங்குவேன். உன்மீது நான் கொண்டுள்ள அன்பு மழையால், எனது உள்ளம் மிகவும் நெகிழ்ந்து, உன் பக்தியோகம் மேலும் தழைக்க வேண்டும்.

10. ஐக்யம் தே தாந ஹோம வ்ரத நியம தப:
ஸாங்க்ய யோகை: துராபம்
த்வத் ஸங்கேன ஏவ கோப்ய: கில
ஸுக்ருதி தமா: ப்ராபு: ஆநந்த ஸாந்த்ராம்
பக்தேஷு அநயேஷு பூயஸ்ஸு அபி
பஹுமநுஷே பக்திம் ஏவத்வம் ஆஸாம்
தத்மே த்வத் பக்திம் ஏவ த்ரயே ஹர
கதாந் க்ருஷ்ணா வாத ஆலய ஈச

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடன் ஒன்றாவதான மோட்சம் என்பது தானம், ஹோமம், வ்ரதம், கர்மாக்கள், தவம், ஞானம், யோகம் போன்றவற்றின் மூலம் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆயினும் அதனைக் கோபிகைகள் (மிகவும் எளிதாகப்) பெற்றனர். உனது சேர்க்கையின் மூலமே அவர்கள் மோட்சம் பெற்றனர். உனது பக்தர்களாக பலர் இருந்தாலும் நீ அந்தக் கோபிகைகளையே உயர்வாகவும், அவர்கள் பக்தியை உயர்வாகவும் கொண்டாய் அல்லவா? எனவே அவர்கள் போன்ற பக்தியை திடமாக எனக்கு அளிக்க வேண்டும். எனது பிணிகளை நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar