நர்மதா நதிதீரம் நோக்கி வாமனர் வந்து கொண்டிருந்தார். வாமனர் என்ற சொல்லுக்கு அழகானவர், குள்ளமானவர் என்று பொருள். தேவகுரு பிரு கஸ்பதி அளித்த யக்ஞோபவீதம்(பூணுõல்) அவருடைய மார்பில் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கையில் கமண்டலமும், தண்டமும் ஞானத்தின் அடையாளமாக இருந்தன. பிரம்மச்சாரியான அந்த இளையவர், தன்னைக் காண வர மாட்டாரா என்று மகாபலி சக்கரவர்த்தி ஏங்கினான். பிரம்ம÷ தஜஸ் நிரம்பிய முகத்துடன் வந்து கொண்டிருந்தார். மகாபலி அவரிடம்,தாங்கள் யாரென்று தெரியவில்லையே?, என்று கேட்டான். அதற்கு அபூ ர்வ: என்று பதிலளித்தார் வாமனர். இதன் பொருள், இதுவரை என்னைப் பார்த்திருக்கவும் முடியாது. நான் யார் என்பதைச் சொன்னாலும் புரியாது, என்பதே. இறைவனை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதையே அபூர்வ என்ற சொல்லால் வாமனர் உணர்த்தினார்.