சிவனைக் குறித்து பாடப்பட்ட பாடல்களை சைவத்திருமுறைகள் என்பர். இதில், திருஞான சம்பந்தர் பாடிய 4147 பாடல்கள், முதல் மூன்று தி ருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அப்பர் பாடிய 3066 பாடல்கள் 4,5,6ம் திருமுறைகளாகும். சுந்தரர் பாடிய 1026 பாடல்கள் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை ஆகும். இவற்றிலுள்ள பாடல்கள் 1056. திரு மாளிகைத் தேவர் முதலான 9 அடியார்கள் பாடிய திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை ஆகும். இதிலுள்ள பாடல்கள் எண்ணிக்கை 301. திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை ஆகும். இறையனார் அருளிய திருமுகப்பாசுரம் தொடங்கி நம்பியாண்டார் நம்பி எழுதிய பதிகங்களும், அதைதொடர்ந்து இறுதியாக 12 ஆசிரியர்கள் பாடியவையும்11ம் திருமுறையாகும். இதில்1400 பாடல்கள் அடங்கும். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் 12ம் திருமுறை ஆகும். மொத்தம்இதிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 4286.இதில் நாயன்மார்களின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது.