துவாரகையில் ஆட்சி செய்யும் துவாரகா நாதனை சிறு வயதிலிருந்தே வணங்கியவள் மீரா. ஒருமுறை மீராவின் வீட்டுக்கு வந்த துறவி ஒருவரிடம் இருந்த கிருஷ்ண விக்ரகத்தை பெற்ற மீரா, வாழ்நாளின் இறுதிவரை பூஜித்தாள். கிருஷ்ணபக்தி பாடல்களைத் தானாகவே இயற்றி படிப்பாள். மணப்பருவம் எய்திய மீரா, மேவார் நாட்டு மன்னன் போஜராஜனை மணந்தாள். ஆனாலும், குடும்ப வாழ்க்கையை விட கிருஷ்ண பக்தியில் லயித்தாள். சில வஞ்சகர்கள் பிரசாதம் என்று சொல்லி விஷம் கலந்த பால் கொடுத்தனர். அப்போது துவாரகை கண்ணன் சன்னிதி தானாகவே மூடிக்கொண்டது. மீரா சன்னிதியை அடைந்தவுடன் கதவுகள் திறந்து கொண்டன. அவள் துவாரகை நாதன் கிருஷ்ணனோடு கலந்தாள்.