பதிவு செய்த நாள்
02
செப்
2015
12:09
கரூர்: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், வரும், 13ம் தேதி முதல், வரும், அக்டோபர், 7ம் தேதி வரை, புரட்டாசிப் பெருந்திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, வரும், 13, 14ம் தேதி, பல்லாக்கு, இரவு கருட வாகனம் உற்சவம், 15ம் தேதி காலை பல்லாக்கு, இரவு சூர்யபிரபை உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம், 16ம் தேதி காலை, 10.45 மணி முதல், 11.45 மணிக்குள் துவஜாரோஹனம், இரவு ஹம்ஸவாகனம் உற்சவம் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, இரண்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு சிம்மவாகனம் உற்சவம், 18ம் தேதி காலை மூன்றாம் திருநாள் பல்லாக்கு, இரவு ஹனுமந்த வாகனம் உற்சவம், 19ம் தேதி காலை, நான்காம் திருநாள் பல்லாக்கு, இரவு கருட வாகனம் உற்சவம், 20ம் தேதி, காலை ஐந்தாம் திருநாள் பல்லாக்கு, இரவு சேஷ வாகனம் உற்சவம், 21ம் தேதி, காலை ஆறாம் திருநாள் பல்லாக்கு, இரவு யானை வாகனம் உற்சவம், 22ம் தேதி காலை, ஏழாம் திருநாள் பல்லாக்கு, மாலை, 4.30 மணிக்கு மேல், 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்பக விமானம் உற்சவம் நடக்கிறது. வரும், 23ம் தேதி காலை பல்லாக்கு உற்சவம், இரவு குதிரை வாகனம் உற்சவம், 24ம் தேதி, ஒன்பதாம் திருநாள் முன்னிட்டு அதிகாலை, 4 மணிக்கு மேல், 5 மணிக்குள் ரதாரோஹணம் உற்சவம், 25ம் தேதி இரவு கெஜலட்சுமி வாகனம், திருக்கொடியிறக்கம் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி இரவு ஏகாந்த சேவை, 27ம் தேதி இரவு பின்னக்கிளை வாகனம், 28ம் தேதி கருட வாகனம், 29ம் தேதி துளசி பிருந்தா வாகனம், 30ம் தேதி வெள்ளி கருட வாகனம், வரும், அக்டோபர், 1ம் தேதி வெள்ளி கருட வாகனம், 2ம் தேதி ஹனுமந்த வாகனம், 3ம் தேதி ஏகாந்த சேவை, 4ம் தேதி வெள்ளி கருட வாகனம், 5ம் தேதி முத்துப்பல்லாக்கு, 6ம் தேதி ஆளும் பல்லாக்கு, 7ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.