பதிவு செய்த நாள்
03
செப்
2015
11:09
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம், புகழி நகர் காரிய சித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மஹா கணபதிக்கு காலை, 11 மணிக்கும், இரவு, 7 மணிக்கும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.