Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிலங்களில் பல கோடி ஊழல்: டாப் 10 ... திருக்கல்யாண மகோற்சவம்: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்! திருக்கல்யாண மகோற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

07 செப்
2015
10:09

மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. மாமல்லபுரம், ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் மாலை, வாசுதேவர் கண்ணனை ஆயர்பாடிக்கு எழுந்தருள வைத்து, சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது. நேற்று ஆலிலை கண்ணனாக தோன்றி, திருமஞ்சனம் நடந்தது. இதேபோன்று, தினமும் மாலை, 3:00 மணிக்கு, அவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து, திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இன்று, வெண்ணைத்தாழி கண்ணன்; நாளை, கோவர்தணகிரி; நாளை மறுநாள், சகடாசூர வதம்; 10ம் தேதி, வேணுகோபால கண்ணன்; 11ம் தேதி, ஏணிக்கண்ணன்; 12ம் தேதி, காளிங்க நர்தனம்; 13ம் தேதி, ஊஞ்சல் கண்ணன்; 14ம் தேதி, கிருஷ்ணர் லீலை; 15ம் தேதி, குழல் ஊதும் கண்ணன் என, காட்சி அளிக்கிறார். இறுதிநாள் உற்சவமாக, 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு, உறியடி கண்ணனுக்கு திருமஞ்சனம்; பகல் 2:00 மணிக்கு, கோலாட்ட பஜனை; மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு வழிபாடு மற்றும் உறியடி உற்சவம் நடைபெறும். உற்சவத்தை முன்னிட்டு, தினமும் ஒரு தலைப்பில் இரவு, 7:00 மணிக்கு, உபன்யாசம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் அருள்மிகு ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar