பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஜென்மாஷ்டமி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2015 11:09
புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில், ஜென்மாஷ்டமி மற்றும் அம்மன் ஜெயந்தி விழா நடந்தது. புதுச்சேரி– திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் 72 அடி உயர பிரத்தியங்கிரா காளி கோவிலில் ஜென்மாஷ்டமி மற்றும் அம்மன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் விழா துவங்கி, 8 மணிக்கு புனித நீரை ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்தனர். பிறகு அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து, சிறப்பு ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜனார்த்தன சுவாமிகள் செய்திருந்தார்.