கோத்தகிரி: கோத்தகிரியில் செவ்வாடை பக்தர்களின் ஆடிப்பூரம் கஞ்சி ஊர்வலம் சிறப்பாக நடந்தது.மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் கோத்தகிரி ஆதிபராசக்தி மன்றங்கள் இணைந்து ஊர்வலத்தை நடத்தின. கோத்தகிரி டானிங்டன் விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மாரியம்மன் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில், ஓம் சக்தி, ஆதிபராசக்தி என்ற கோஷங்களுடன், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி குடம் எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கஞ்சி பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோத்தகிரி மாரியம்மன் கமிட்டி நிர்வாகி வடிவேல், அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மன்ற நிர்வாகி ஜெயலட்சுமி காளிதாஸ் மற்றும் அட்டவளை பெள்ளி உள்ளிட்ட, ஆதிபராசக்தி மன்றத்தினர் செய்திருந்தனர்.