ஆவணி ஞாயிறு தினத்தில் நாகராஜருக்கு பால் ஊற்றும் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2015 12:09
நாகர்கோவில்:ஆவணி ஞாயிறு தினத்தில் நாகராஜருக்கு பால் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எல்லா கோயில்களிலும் நாகருக்கு என சன்னதி இருந்தாலும், நாகரை மூலவராக கொண்ட கொயில் நாகர்கோவில் நாகராஜாகோயில். இங்குள்ள மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையின் கீழ்தான் உள்ளது. இங்கு ஆவணி ஞாயிறு நாளில் பக்தர்கள் குறிப்பாக அதிக அளவில் பெண்கள் பால் ஊற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு பால் ஊற்றி வழிபட்டால் திருமணம் விரைவாக நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பெண்கள் நம்பிக்கையாகும். இன்று அதிகாலை முதலே ஆண்களும், பெண்களும் நீண்ட கியூவில் நின்று நாகருக்கு பால் ஊற்றி வழிப்பட்டனர்.