கல், தர்ப்பை, மரகதம் ஆகியவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை இப்போது பார்க்க முடிகிறது. ஆனால், வெண்ணெயால் செய்யப்பட்ட லிங்கம் ஒரு காலத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் இருந்ததாம். நவநீறஸ்வர சுவாமி என்றழைக்கப்பட்ட இந்த லிங்கத்தை காமதேனு ஸ்தாபித்தது என்பர். தற்போது, இந்த லிங்கம் இருந்த இடத்தில் கல் லிங்கமே இருக்கிறது. ஆயினும், பக்தர்கள் தங்கள் கோரிக்கையை வெண்ணெய் உருகுவது போல், மனமுருகி வழிபட்டால், தீராத சிக்கலெல்லாம் இந்த சிக்கல் தலத்து சிவனால் நீங்கும்.