பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று (9ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி 7ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று (8ம் தேதி) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று (9ம் தேதி) நான்காம் கால யாகயசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.