பதிவு செய்த நாள்
12
செப்
2015
11:09
உத்திரமேரூர்: ஆதவப்பாக்கத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்துள்ள ஆதவப்பாக்கத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் கூழ்வார்த்தல் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான விழா நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனையும்; காலை 11:00 மணிக்கு, அம்மன் திருகுட வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தன. அப்போது, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும், உடலில் பழங்கள் குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் 2.00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அமர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த எல்லையம்மனுக்கு, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.