பரனூர் ராதிகாரமண பக்தகோலாகலன் பிரம்மோத்சவ விழாவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2015 11:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோத்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவில் ஸ்ரீ ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மேலதாளம் முழங்க, தேர் நிலைக்கு எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தேரோட்டத்தை துவக்கிவைக்க, ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து கோவிந்தா கோஷம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி ஆடிபாடி மகிழ்ந்தனர். மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தவுடன் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.