சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் மதுரகாளியம்மன் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. சேத்தியாத் தோப்பு அடுத்த வடக்கு சென்னி நத்தம் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஆவணி மாதம் நடந்தது. ஒரு ஆண்டு முடிந்த நிலையில் முதலாம் ஆண்டு விழாவில் சிதம்பரம் வெங்கடேச தீட்சதர் தலைமையில் வருஷாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.