காஞ்சிபுரம்: சர்வதீர்த்த குளம் கால்வாய், பல இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளால், தண்ணீர் வராத சூழல் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பராமரிப்பில் உள்ளது சர்வதீர்த்த குளம். 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு, லாலா கால்வாய் தண்ணீர் வரை, பிரதான வழியாக இருந்து வந்தது. ஒலிமுகமது பேட்டை வழியாக வரும் இந்த கால்வாய், 10 அடி அகலம் கொண்டதாக இருந்தது. காலப்போக்கில் இந்த கால்வாய் துார்ந்து போனது. தற்போது, கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் கேட்டால், பொதுப் பணித்துறை பராமரிக்க வேண்டும் என்கின்றனர். அவர்கள், நகராட்சிதான் பராமரிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.இதையடுத்து கோவில் நிர்வாகம் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். சில மாதங்களுக்கு முன் நகராட்சி, ஆட்சியரிடம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்து உள்ளோம் என்றனர்.