உடுமலை: உடுமலையில் ராம பட்டாபிேஷக விழா நடந்தது. உடுமலை, தர்ம ரக்ஷன சமிதி சார்பில், கடந்த 4ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஜி.டி.வி.லே-அவுட்டில் உள்ள, செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில், நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். நிறைவு நாளான்று, ராம பட்டாபிேஷக விழா நடந்தது. கோவில் வளாகத்தில் ராமர் - சீதை படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.