விருகம்பாக்கம் ஆவிச்சி கல்லுாரியில் சோம்நாத் ஜோதிர்லிங்க ருத்ர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 10:02
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சோம்நாத் ஜோதிர்லிங்க ருத்ர பூஜை நேற்று நடந்தது.
வாழும் கலை அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் ஜி. பல நுாற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் புனித சோம்நாத் ஜோதிர்லிங்கம் இவரிடம் உள்ளது. இந்த ஜோதிர்லிங்கம், நாடு முழுதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த சோம்நாத் ஜோதிர்லிங்க புனித யாத்திரை நேற்று சென்னை வந்தது. விருகம்பாக்கம் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சோம்நாத் ஜோதிர்லிங்க ருத்ர பூஜை நேற்று நடந்தது. சுவாமி ஸ்ரீதேஜ், பூஜை நடத்தி வழிபாடு செய்தார். பின் தீபாராதனை செய்து, அங்கு திரண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
முன்னதாக, சுவாமி ஸ்ரீதேஜ் பேசியதாவது: ஆன்மிக வழிபாடுகளில் பங்கேற்று, பேசிக் கொண்டும், மொபைல் போனுடன் இருப்பதும் பண்பு கிடையாது. இன்று நம் கலாசாரம் எப்படி இருக்குது என்றால், நாம் எல்லாருமே கையில் மொபைல் போன் எடுத்துக்கொண்டு, ஒரு போட்டோ எடுக்கிறோம். இதை நாம் தொடர்ந்து செய்தால், அடுத்த தலைமுறையினருக்கு, ஆன்மிகம் குறித்த புரிதல் மாறி விடும். இவ்வாறு அவர் பேசினார்.