ஜாவா நாட்டில் விநாயகரை கல்விக்கடவுளாக வணங்குவர். இங்குள்ள ஆற்றங்கரைகளில் நம்நாட்டைப் போலவே விநாயகர் சிலைகளை காணலாம். அவை யாவும் தானாக உற்பத்தியான சுயம்பு கணபதியாக கருதப்படுகிறது. ஆனால், இந்நாட்டில் தந்தங்கள் உடையாமல் இருக்கும். எனவே மகாபாரத காலத்துக்கு முந்தைய விநாயகராக இவரை கருத இடமிருக்கிறது. இங்குள்ள விநாயகர் மொட்டைத் தலையுடன் இருப்பார். மண்டை ஓடு மற்றும் எலும்பு மாலை அணிந்துள்ளார். கோடரியும், கரண்டியும் வைத்திருப்பார்.