விநாயகரை பிரம்மச்சாரியாக கருதி ஒரு சாரார் வழிபடுகின்றனர். ஒரு சாரார் அவர் பிரம்மனின் புதல்விகளான சித்தி, புத்தியை தன் சக்திகளாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே இவர் சித்தி புத்தி விநாயகர் எனப்பட்டார். சில பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக திருக்கல்யாணம் நடத்திப் பார்க்கின்றனர். விநாயகர் திருமாலின் 12 புத்திரிகளைத் திருமணம் செய்ததாகக் கூறுகிறார் வாரியார். மோதை, ப்ரமோதை, ஸுமநஸை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருஹாசை, ஸுமத்யமை, நந்தினி, சாமதை என்பவை அவர்களது பெயர்கள்.