காஞ்சிப்பெரியவர் தன் தெய்வத்தின் குரல் நுõலில், ப்ராசீன லேகமாலா என்ற பழைய சிலாசனம், தாமிர சாசனம் முதலானவைகளைத் தொகுத்து மும்பையிலுள்ள நிர்ணயஸாகர் அச்சுக்கூடத்தார் தங்களுடைய காவ்யமாலா என்ற தொகுப்பில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளகன்னடியன் கால்வாய் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் என சொல்லி உள்ளார்.1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில், இந்த கால்வாய் கரையிலுள்ள சேரன்மகாதேவி மிளகு பிள்ளையார் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மழை குறையும் காலத்தில் பிள்ளையாரின் உடலில் மிளகை அரைத்து பூசுகிறார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுக்கும் என நம்புகிறார்கள். இந்த கால்வாய் நீர் பிராஞ்சேரி என்ற கிராமத்திலுள்ள குளத்தில் சேர்கிறது. இந்த குளத்தின் மூலமும் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.