திருக்காவளூரில் அருள்பாலித்து வரும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க பன்னிரண்டு படிகள் ஏற வேண்டும். இந்த பன்னிரண்டு படிகளும் ராசியையும், மாதத்தையும் நினைவுபடுத்துபவை. இந்த பன்னிரண்டு படிகளையும் தாண்டிச் சென்று முத்துக்குமாரசாமி தம்பதியினரை தரிசிப்போருக்கு ஒரு மகாமகம் பார்த்ததற்குண்டான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.