திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அயனீச்சரம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கைலாச நாதர் கோயிலில் 7 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட பிட்சாடனர் சிலை காணப்படுகிறது. பாதத்தின் பிடி தவிர வேறு எந்த விதத் தாங்கலும் இல்லாமல் இந்தச் சிலை நிற்பது அதிசயம்.