Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவலூர்பேட்டை விநாயகர் சதுர்த்தி ... பரமக்குடியில் விநாயகர் ஊர்வலம்! பரமக்குடியில் விநாயகர் ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள்!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள்!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
01:09

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 18.9.15 விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல்லில் இந்து தர்மசக்தி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

இதில் 11 சிலைகள் கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டில் துவங்கிய ஊர்வலம், ஏ.எம்.சி., ரோடு, மெயின்ரோடு, வழியாக கோட்டை குளத்தை அடைந்தது. மாநில செயலாளர் மாணிக்கம் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சரவணன் எஸ்.பி., டி.எஸ்.பி., வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி 54 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தில் முன்னால் சென்ற வாகனங்கள் மற்றவர்களை காணாததால் திரும்பி வந்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் கண்ணாபட்டி வைகை ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக நடந்த கூட்டத்திற்கு மின்னல்கொடி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். ஏற்பாடுகளை பா.ஜ.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர தலைவர் மதுரைவீரன் செய்திருந்தனர்.

நிலக்கோட்டை:
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் ஹரிஹரபாண்டியன், பா.ஜ., நகர தலைவர் பட்டம் முன்னிலையில் ஊர்வலம் நடந்தது. மாநில இணை அமைப்பாளர் பொன்னையன் பேசினார். அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, சின்னகவுண்டன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்தும் 11 சிலைகள் அய்யம்பாளையம் மருதா நதியில் கரைக்கப்பட்டன.

கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், ரெட்டியார்சத்திரம், போத்திநாயக்கன்பட்டி, கசவனம்பட்டி கிராமங்களில் 63 இடங்களில் சிலைகள் அமைத்து பூஜைகள் நடந்தது. வாணவேடிக்கை, மாணவர்களுக்கு பரிசளிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக்கிராமங்கள் தவிர்த்த பிற இடங்களில் இருந்து 53 சிலைகள் கன்னிவாடிக்கு கொண்டு வரப்பட்டன. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜ்மோகன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். விநாயகர் சிலைகள் மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டன.

தருமத்துப்பட்டி: இங்கு செப். 17ல், மாலையில் விநாயகர் ஊர்வலம் துவக்க முயன்றனர். மாலையில் நடத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், ரோடு மறியல் செய்தனர். தடியடி நடத்திய போலீசார், பலரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மீண்டும் விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். புதிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. போலீஸ் பாதுகாப்பு ஊர்வலம் நடத்தியபின் கோம்பை நீர்தேக்கத்தில் கரைத்தனர்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 54 சிலைகள் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர் சுந்தரேஷ்குமார், செயலாளர் ரகுபதி கலந்து கொண்டனர். விருப்பாட்சி தழையூத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது. டி. எஸ். பி., செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை பகுதியில் லந்தகோட்டையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பங்களா மேடு சென்று குளத்தில் கரைக்கப்பட்டது. மேலும் எரியோடு, வைவேஸ்புரத்தில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கணேசன், செயலாளர் ஆறுமுகம், தங்கபிரபு பங்கேற்றனர். டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar