பதிவு செய்த நாள்
21
செப்
2015
12:09
ஆர்.கே.பேட்டை: பாலாபுரம், மருவத்துாரம்மனுக்கு, நேற்று, பக்தர்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் மருவத்துாரம்மன் கோவில் உள்ளது. பாலாபுரம், ஆர்.ஜே.கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று, மருவத்துாரம்மனுக்கு, கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். ஆர்.ஜே.கண்டிகை மலையடிவாரத்தில் உள்ள கொள்ளாபுரியம்மன் கோவிலில் இருந்து, காலை, 10:00 மணிக்கு, கஞ்சி கலயங்களை சுமந்து, பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட செவ்வாடை தொண்டர்கள், ஊர்வலமாக சென்று மருவத்துாரம்மனுக்கு கஞ்சி கலயங்களை படைத்தனர். அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. பின், உற்சவர் அம்மன், உள் புறப்பாடு எழுந்தருளினார்.