புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிக உற்சவம் இன்று துவங்குகிறது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் அடுத்தமாதம் 5ம் தேதி வரையில் நிகமாந்த மகா தேசிக உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று (24ம் தேதி) காலை முதல் கால ஹோமம், மாலையில் இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. நாளை (25ம் தேதி) காலையில் மூன்றாம் கால ஹோமம், வாமன பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை நடக்கிறது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாமன பெருமாள் சுவாமி தேசிகனுடன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் பக்த ஜன சபையார் மற்றும் சிறப்பு அதிகாரி செய்துள்ளனர்.