Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... திம்மராயப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2015
11:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளின் சுகாதாரம் பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற குழுவினர் கடந்த ஆண்டு பலமுறை ஆய்வு செய்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் குறித்து ஆய்வுசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வழக்கறிஞர்கள் சுந்தர், கிருஷ்ணவேணி, சீனிவாச ராகவன் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது. இக்குழுவினர் நேற்று ராமேஸ்வரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், சுற்றுலாதுறை துணை இயக்குனர் வேணுகோபால், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா, இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி, சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் பங்கேற்றனர். பின் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள், சுற்றுலாதுறை ஏற்படுத்திய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை ஓரிரு தினங்களில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளிக்க உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். சுற்றுலாவில் முறைகேடு: சுற்றுலா மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 6 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சுற்றுலாதுறை அதிகாரி வேணுகோபாலிடம், சுற்றுலா ஆர்வலர்கள் புகார் செய்தனர். உயர்நீதிமன்ற குழுவிடம் புகார் செய்யுங்கள், எனக்கு ஒன்றும் தெரியாது என கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar