நத்தம்: நத்தத்தில் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விஸ்வகர்ம சங்கங்கள் சார்பில் குரு ஜெயந்தி விழா நடந்தது. இதில் பிரம்மா மற்றும் காயத்ரி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரார்த்தனை நடந்தது. உலக நன்மை வேண்டி யாக பூஜைகள் நடந்தது. விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கேசவன், துணை தலைவர் சக்திவேல், துணை செயலாளர் சரவணன் கலந்து கொண்டனர்.