பதிவு செய்த நாள்
26
செப்
2015
11:09
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு இன்று, சிறப்பு யாகம் நடக்கிறது.திருவள்ளூர் திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உற்சவம் கடந்த, 23ம் தேதி துவங்கியது. இதில், நான்காவது நாளான இன்று காலை 9:00 மணிக்கு, சிறப்பு யாகம், மதியம் 12:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, மாலை 6:00 மணிக்கு நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகின்றன.திரிபுர சுந்தரி அம்மனுக்கு, பவுர்ணமியை முன்னிட்டு நாளை மாலை 6.30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு அதிரசத்தலான பாவாடை அணிவிக்கப்படுகிறது.