தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் காட்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2015 03:09
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, குருவாயூரப்பன் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உகந்த வாரமாக கருதி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சனிக்கிழமையை முன்னிட்டு,வைகுண்டபதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின் வைகுண்டபதி பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நான்காவது வாரத்தில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பெருமாள் ரத வீதிகள் வழியாக உலா வருவார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் பூவலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.