காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து திருத்தெளிச்சேரி சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோவில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி மகோத்சவம் நடந்தது. இதையொட்டி கடந்த 26ம் தேதி பஞ்ச மூர்த்திகள் மூலமந்த ஹோமம், விசேஷ அபிஷேக ஆராதனையோடு துவங்கியது. நேற்று பஞ்சமுர்த்திகள் வீதியுலா சென்று காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் தீர்த்தவாரி நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.