Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயிலில் போட்டோ உரிமம் ... செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழா கோலாகலம் செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவுடையம்மன் கோவில் குடமுழுக்கிற்கு 32 ஆண்டுகளாக காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
திருவுடையம்மன் கோவில் குடமுழுக்கிற்கு 32 ஆண்டுகளாக காத்திருப்பு!

பதிவு செய்த நாள்

30 செப்
2015
11:09

மீஞ்சூர்: திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால், மேலுார் திருவுடையம்மன் கோவில் பாழடைந்து வருவதுடன், 32 ஆண்டுகளாக குடமுழுக்கு செய்யாமல் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் – திருவுடையம்மன் கோவில் உள்ளது. செல்வம், குழந்தைப்பேறு போன்ற வேண்டுதல்களுக்காக, இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், தமிழ்நாடு சுற்றுலா துறையின் நவசக்தி கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது.

பணிகள் நிறுத்தம்:
இக்கோவிலில், 1983ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 2000ம் ஆண்டு, கும்பாபிஷேக பணிகளுக்காக, இக்கோவிலில் பாலாயம் செய்யப்பட்டதுடன், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில்,  2014ம் ஆண்டு, 30 லட்சம் ரூபாய் நிதியில், இக்கோவிலில் திருப்பணிகள்  துவங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுநாள் வரை எந்த  பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், 32  ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது. தற்போது, இக்கோவில் வளாகம் புதர் மண்டியும்; சுற்றுச்சுவர் உடைந்தும்; அம்மன், ஈஸ்வரர் சன்னிதி கோபுரங்களில் செடிகள் வளர்ந்தும் உள்ளன. நவக்கிரக சன்னிதி கட்ட, துவங்கப்பட்ட கட்டட பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அருள்மிகு திருவுடையம்மன் சேவா சபாவின் செயலர் சத்தியதாஸ் கூறுகையில், ‘இந்த கோவிலைபுனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த அமைப்பை  துவங்கி உள்ளோம். திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க, சபாவில் உள்ளவர்கள் தயாராக உள்ளனர். அறநிலையத் துறையினர்தான் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தனியார் பங்களிப்பு:
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத இந்து சமய அறநிலையத் துறை  அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பழமையான கோவில் என்பதால், தொல்லியல் துறையினர் ஆய்வு  மேற்கொண்டு, பழமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர். மறு மதிப்பீடு செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தற்போது தனியார் பங்களிப்புடன், பணிகளை துவக்க உள்ளோம்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar