பாலசமுத்திரம் பெருமாள் கோயில் ரூ.95லட்சத்தில் கும்பாபிஷேக பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2015 12:09
பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ரூ.95 லட்சம் செலவில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு ஆவணிபிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் 1996ல் மகாகும்பா பிஷேக விழா நடந்தது. தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கோயில் கோபுரங்கள், சிலைகள், புதிய தரைத்தளம், முன்மண்டபம் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. திருப்பணிகளை முடித்து இவ்வாண்டில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" திருப்பணியில் தற்போது கோபுர வேலைப்பாடு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அனைத்துப்பணிகளும் சில மாதங்களில் முடிந்துவிடும். இந்துசமய அறநிலைத்துறை ஆணையர் அனுமதிபெற்று விரைவில் குடமுழுக்குவிழா நடத்த திட்டம் உள்ளது,என்றார்.