முருக்கேரி : முருக்கேரியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பகவானுக்கு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மூன்று கலசத்தில் புனித நீர் ஊற்றி, யாகசாலை முன் வைத்து, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம் நடந்தது.இந்த ஆண்டிற்கு தேவை யான மழை வேண்டி வருண பூஜை, வருண ஜபம் மற்றும் ஹோமங்கள் நடந்தது. கலசத்தில் உள்ள புனித நீரை முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி மற்றும் நாகராஜ் குருக்கள் ஆகியோர் மூலவர் நாகாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்து வைத்தனர்.