க.பரமத்தி: பாலமலை வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி யூனியன் பவுத்திரம் பஞ்சாயத்தில் உள்ள பாலமலை வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, நேற்று முன்தினம், விசேஷ பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் விநாயகர், கருடாழ்வர், வீரஆஞ்சநேயர், வரதராஜபெருமாள் காட்சி அளித்தார். பின்னர் பால், மஞ்சள், துளசி போன்ற பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின், ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.