நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் அதிதூதர் திருவிழா தேர்ப்பவனியுடன் நடந்தது. மைக்கேல் அதிதூதர் திருவிழா கொடியேற்றத்தில் வட்டார பாதிரியார் சேவியர் பங்கேற்றார். தொடர்ந்து ஏழு நாட்கள் பாதிரியார்கள் மதுரை அருள்ராயன், வக்கம்பட்டி ஆரோக்கியசகாயராஜ், திண்டுக்கல் லாரன்ஸ்சகாயராஜ், திருச்சி சகாயராஜ், வத்தலக்குண்டு ரெக்ஸ்பீட்டர், நிலக்கோட்டை மரியபிரபு, சிலுக்குவார்பட்டி செபாஸ்டின் டைட்டஸ், வத்தலக்குண்டு உதவி பாதிரியார் அருண் அருளப்பன் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. ஏழாம் நாள் இரவு மதுரை மறைமாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் மந்திரித்தபின் சப்பர பவனி நடந்தது. இறுதி நாளில் பகலில் தேர்ப்பவனி, நற்கருணை ஆசீர் நடத்தி கொடி இறக்கப்பட்டது.