புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கான காசோலை வழங்கப்பட்டது. முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட முத்தாலம்மன், முத்து ரட்சக மாரியம்மன், மந்தைவெளி மாரியம்மன், பெரியபாளையத்தம்மன் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்காக தலா ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையை ஆலய நிர்வாகிகளிடம் நந்தா சரவணன் எம்.எல்.ஏ., வழங்கினார். கோவில் அறங்காவலர் குழுவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.