மடத்துக்குளம்: கணியூர் ஐயப்பன் கோவிலில் நடந்த உத்திர நட்சத்திர சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே கணியூரில் அமைந்துள்ள, ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை நேற்று நடந்தது. காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், மங்கள இசை, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார ஆராதனை, காலை, 11:00 மணிக்கு கணபதி ேஹாமம், மதியம், 12:00 மணிக்கு ஐயப்பனுக்கு 21 வகையான சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகளுடன் உத்திர நட்சத்திர சிறப்பு பூஜையும் நடந்தன. பகல், 1:30 மணிக்கு ராஜ அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.