சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடந்த 22ம் தேதி காலை அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், காத்தவராயன். ஆரியமாலா திருக்கல்யாணமும் நடந்தது. மாலை 4 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. இரவு முத்துபல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.