பதிவு செய்த நாள்
14
அக்
2015
01:10
ஆர்.கே.பேட்டை: நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், புதரில் மறைந்து சீரழிந்து வரும் சிவன் கோவில், சீரமைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏராளமான பகுதிவாசிகள் முதன் முறையாக இந்த கோவிலுக்குள் சென்று பார்வையிட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமம், கோவர்த்தனகிரி மலையடிவாரம் ஒட்டியுள்ள ஏரிக்கரையில், சந்திரேஸ்வரர் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், பல ஆண்டுகளாக வழிபாடு இன்றி, சிதைந்து கிடக்கிறது. புதர்மண்டி, பொலிவிழந்து வரும் இந்த கோவிலின் வரலாறு குறித்து யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கோவிலில் நேற்று உழவார பணி மேற்கொள்ளப்பட்டது. கோவிலை சுற்றிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. செடி, கொடிகள் அகற்றப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் இந்த கோவிலுக்குள் முதல்முறையாக சென்று பார்வையிட்டனர்.