சென்னை: நவராத்திரி திருவிழா, 13.10.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா சென்னையில் உள்ள கோவில்களில் 13.10.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்; பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன்; மண்ணடி மல்லிகேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் கோவிலில், அம்பாளுக்கென்றே தனி கொடிமரம் உள்ளது. மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும், தினமும் மாலை, 6:00 மணிக்கு, ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா வரவுள்ளார். மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், வரும், 22ம் தேதி, இரவு 9:00 மணியளவில், கொடியிறக்கத்துடன் பாரிவேட்டை புறப்பாடு நடக்கிறது.