பழநி: பழநி மலைக் கோயில் “ரோப்கார்” அக்.,14,15 (இன்றும், நாளையும்) ஆகிய இரண்டு நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட உள்ளது.
பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில் ரோப்கார் இயக்கப் படுகிறது. இதில் அக்.,14,15 ஆகிய இரண்டு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிநடக்க உள்ளது.அதில் உருளைகள், கம்பிவடக்கயிறு, பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவர். பின் ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ரோப்கார் அக்.,16 முதல் வழக்கம்போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.