பதிவு செய்த நாள்
14
அக்
2015
02:10
ராமேஸ்வரம்: சென்னை, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் திருப்பணியை, விரைவாக முடித்து, 2016 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி சன்னிதி விமானங்கள், பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவற்றில், வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது; சேதுபதி மண்டபம், தங்கும் விடுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி நுழைவு வாயிலில், புதிதாக கருங்கல் மண்டபம் அமைக்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு நுழைவு வாயிலில், கோபுர திருப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க, கோவில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.