பதிவு செய்த நாள்
15
அக்
2015
11:10
கோவை: ஈஷா யோக மையத்தில் நடந்து வரும் நவராத்திரி விழாவின், இரண்டாம் நாளான நேற்று, புதுச்சேரி சகோதரிகளின் நாட்டியம், பரவசப்படுத்தியது.
கடந்த, 13ம் தேதி துவங்கி, வரும், 22ம் தேதி வரை நடக்கும் விழாவில், நேற்று, புதுச்சேரி சகோதரிகள் கற்பகவின்னி மற்றும் அசோகவதனியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய
நடனங்களான பரதநாட்டியம் மற்றும் கதக் நடனங்களை, இவர்கள் அரங்கேற்றினர். கடந்த, 2005, 2007ம் ஆண்டு, சிறந்த குழந்தை நடனக் கலைஞருக்கான புதுச்சேரி அரசின் விருதை பெற்றனர். 2013ல், பெங்களூரு கலாசார சந்திப்பில், சிறந்த நடன அமைப்பாளர் விருதையும் பெற்றனர். இதே ஆண்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் முன், நாட்டிய நிகழ்ச்சியை வழங்கிய பெருமைக்கு உரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.