இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2015 11:10
செஞ்சி: இஞ்சிமேடு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அருகே உள்ள இஞ்சிமேடு பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது.
காலை 7 மணிக்கு பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கோபூஜையும் நடந்தது. கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு, இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்ட சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும் நரசிம்ம, மகாலட்சுமி, தன்வந்தரி, கருட பூஜையும், ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.