பதிவு செய்த நாள்
17
அக்
2015
11:10
அவிநாசி: தெக்கலூர் அழகு நாச்சியம்மன் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக நேற்று ஆலோசிக்கப்பட்டது. அவிநாசி அடுத்த தெக்கலூரில், நூற்றாண்டு பழமைவாய்ந்த அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. திருப்பணி செய்து, கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என, அறநிலையத்துறைக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுகுறித்த ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில், நேற்று நடைபெற்றது. கோவில் தக்கார் அழகேசன் பேசுகையில், ""அழகு நாச்சியம்மன் கோவிலை சீரமைத்து, திருப்பணி செய்ய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஸ்தபதியை வரவழைத்து, திருப்பணி குறித்து ஆலோசிக்கப்படும், என்றார். "கோவிலை புனரமைத்து, நுழைவாயில் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணி மேற்கொள்ளப்படும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.