புதுச்சேரி: சின்னசுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில் அம்மன் கஜலட்சுமி அலங்காரத்தில் நேற்று அருள்பாலித்தார். சின்னசுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 13ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. மங்கள துர்கை, சம்ஹார துர்கை, பட்டீஸ்வரம் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று கஜலட்சுமி கோலத்தில் அருள் பாலித்தார். நாளை சந்தான லட்சுமி கோலத்தில் சுவாமி அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் செய்து வருகிறார்.